புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – 18 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம்
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விருப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் தி.மு.க, காங்கிரஸ் தலா 18 தொகுதிகளை கேட்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.






