சென்னையில் மீண்டும் உயரும் சொத்துவரி!
சென்னை சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தான் குடியிருப்புகளுக்கான சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 6 சதவீதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.





