சொத்து வரி உயர்த்தவில்லை: அரசு விளக்கம்
நகராட்சி, மாநகராட்சிகளில் சத்தமின்றி 6% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறையால் சொத்துவரி எதுவும் உயர்த்தப்படவில்லை என அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
6% சொத்து வரி அமலுக்கு வந்துள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது; இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.





