--- --:--:-- --

பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்களை விநியோகிப்பதில் பிரச்சனை..!

10

யோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்களை விநியோகிப்பதில் பெரும் பிரச்சினைகளை ஏற்பட்டதையடுத்து பழையபடி ஸ்மார்ட் அட்டைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் கை ரேகைகளை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறையில் நியாய விலை கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

 

ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பயனாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் தினசரி நிகழ்வாக உருவெடுத்தது. பல இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களும் அரங்கேறின.

 

பிரச்சனை சரி செய்யப்பட்டு பொருட்களை வாங்கலாம் என்று கடந்த 14ம் தேதி உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி அறிவித்தபோது பயோமெட்ரிக் பிரச்சினை வெடித்தது. இதையடுத்து கடந்த ஒன்றாம் தேதி கடைபிடிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு முறையில் ரேஷன் பொருட்கள் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

 

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்பு பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon