நாளை மறுநாள் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நாளை மறுநாள் (அக்.23) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பாக அவர் ராகுல் காந்தியை சந்தித்து கல்பெட்டாவில் சாலை பேரணி நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
வேட்புமனு தாக்கலின் போது சோனியா காந்தி, கார்கே மற்றும் காங்., கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.






