--- --:--:-- --

யானையின் காதில் தீ வைத்தவர்கள் குறித்து விசாரிக்க தனிப்படை..!

9

சினகுடியில் உயிரிழந்த காட்டு யானையின் காதில் தீ வைத்தவர்கள் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மசினகுடி பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக சுற்றிவந்த காட்டுயானை கடந்த 3 மாதகாலமாக முதுகில் காயத்துடன் சுற்றி திரிந்துள்ளது.

 

இதற்கு சிகிச்சை அளித்த நிலையில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. யானைக்கு சிகிச்சை அளிக்க மயக்க ஊசி செலுத்தி பிடித்துக் கொண்டு சென்றபோது யானை உயிரிழந்துள்ளது. இன்று யானையின் பிரேத பரிசோதனையில் யானையின் காது பகுதியில் பெட்ரோல் அல்லது ஆசிட் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.

 

இதையடுத்து யானையின் காதில் தீ வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்த சிங்கார வனச்சரகர் காந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தங்கள் விசாரணையை தொடக்கியுள்ள தனிப்படையினர் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று கூறுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon