கொரொனா சிகிச்சையின்போது காலை இழந்த தனியார் நடத்துனர்..!
கொரொனா சிகிச்சையின்போது காலை இழந்ததற்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணம் என அரசு போக்குவரத்து கழக நடத்துனர் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு கிராமத்தை சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து நடத்துனர் ரமேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரொனாவால் பாதிக்கப்பட்டு காரமடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சையின்போது இடது காலில் கடுமையான வலி ஏற்படவே அதற்கும் சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்த பொழுது இடது காலில் ரத்தம் உறைந்து இருப்பதாக கூறி காலை அகற்றியதாக ரமேஷ் கூறுகிறார். தனது நிலைக்கு தவறான சிகிச்சை வழங்கிய தனியார் மருத்துவமனையே காரணம் எனக் கூறும் ரமேஷ் தனக்கு உதவ வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .
இதனால் சிலருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்படக்கூடும் எனக் கூறியுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்கள் சிகிச்சையால் ரமேஷுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.






