தனியார் பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தனியார் பேருந்து விபத்திற்கு உள்ளானதில் 37 பேர் காயமடைந்தனர். கீழ்ப்பட்டியில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது.
இதில் 37 பேர் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர்.






