பிரதமர் நரேந்திர மோடி இன்று கேதார்நாத் பயணம்..!
The Prime Minister, Shri Narendra Modi addressing at the joint SCO-CSTO Outreach Summit on Afghanistan, through video conferencing, in New Delhi on September 17, 2021.
பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டுள்ள கேதார் நாத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றார்.
அங்கு ஆதிசங்கரர் நினைவிடம் மற்றும் 13 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
அதை தொடர்ந்து 180 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் தங்க படித்துறை புணரமைப்பு, முதலுதவி, சுற்றுலா, மருத்துவமனை, காவல் நிலையம், நவீன கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட உள்ளன என்று பல திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.






