--- --:--:-- --

இந்திய சீன எல்லையில் பதற்றம்!முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

6.1

முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இமயமலை சாரலில் பனிபடர்ந்த இந்திய – சீன எல்லை எப்போதூம் வெடிக்க காத்திருக்கும் எரிமலை தான். இந்திய சீன எல்லை 3 ஆயிரத்து 488 கிலோமீட்டர் நீண்டது. லடாக் பகுதியில் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியை 1962 ஆம் ஆண்டு போரின்போது சீனாவை கைபற்றி வைத்திருக்கிறது.

 

இதைப்போல சிக்கிமின் கிழக்கு பகுதியில் டோக்லாம் பகுதியை உரிமை கொண்டாடி வருகிறது. சமீபகாலமாக அருணாச்சல பிரதேசத்தில் 90,000 சதுர கிலோமீட்டர் பகுதி தங்களது ஆளுமைக்கு உட்பட்ட பகுதி எனவும் அங்கே இந்தியா கட்டுமானங்களை ஏற்படுத்தக் கூடாது என்றும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

 

லடாக் பகுதியில் தான் ஆக்கிரமித்துள்ள எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சுமார் ஐந்தாயிரம் வீரர்களையும் தளவாடங்களையும் சீனா குவித்து வருகிறது, அதற்கு முன்பாகவே இந்தியப் பகுதியில் இந்தியா புதிய சாலை ஒன்றை அமைத்து வருகிறது, இதனருகில் ஆக்கிரமிப்பு லடாக் பகுதியில் பெரிய அளவில் ராணுவ பதுங்கு குழிகளையும் கட்டடங்களையும் சீனா கட்டி வருகிறது.

 

மே 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இந்திய எல்லைப் பகுதியில் பாங்கொங்க் புகுந்த சீன ராணுவ வீரர்களை இந்திய படை வீரர்கள் அமைதியான முறையில் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது இந்தோ திபெத் எல்லை காவல் துறை வீரர்களின் ஆயுதங்களை சீன மக்கள் ராணுவத்தினர் பறித்துக் கொண்டதாகவும் சிலர் தடுத்து வைத்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

 

இந்நிலையில் சீனாவின் அத்துமீறல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் முப்படைகளின் தளபதி ஆகியோர் இதில் பங்கேற்றனர். சீனாவின் நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தனர்.

 

எல்லைப் பகுதியில் தற்போது உள்ள நிலை தொடர இந்தியப் படையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் காஷ்மீர், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவும் காஷ்மீரில் பாகிஸ்தான் உத்தரகாண்ட் எல்லை இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தி வருவது இதுவே முதல் முறை.

Leave a Reply

Right Menu Icon