--- --:--:-- --

ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி மனு!

5

நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசு தலைமை வழக்கறிஞர் இடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசக வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர் எஸ் பாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 23 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் பின்னர் இடைக்கால ஜாமினில் வெளிவந்தார்.

 

இந்த நிலையில் நீதிபதிகள் தங்கள் திறமையால் அல்லாமல் அரசியல் கட்சிகளின் ஆதரவாலேயே அந்த பதவிக்கு வருகிறார்கள் என்பதைப் போல ஆர் எஸ் பாரதி பேச்சு இருந்ததாகவும் இது ஒட்டுமொத்த நீதித்துறையின் மாண்பை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறி ஆர் எஸ் பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு வழக்கறிஞர் அண்டனி ராஜ் என்பவர் அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனிடம் மனு அளித்தார்.

Leave a Reply

Right Menu Icon