--- --:--:-- --

விண்வெளியில் குடியேற இருக்கும் வீரர்களுக்கு உணவு பொருட்கள் தயார்

2

ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு வழங்குவதற்காக இட்லி உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தை நிறைவேற்ற இஸ்ரோ முனைப்பு கொண்டுள்ளது.

 

முதற்கட்டமாக ரோபோவை விண்ணுக்கு அனுப்பி பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளனர். விண்ணுக்கு அனுப்புவதற்காக விமானப்படையை சேர்ந்த நான்கு வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்களுக்கு இந்த மாத இறுதியிலிருந்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மைசூரில் உள்ள பாதுகாப்பு துறைக்கான உலக பரிசோதனை மையம் விண்வெளி வீரர்களுக்கான உணவு பொருட்களை தயாரித்துள்ளது.

 

இட்லி, வெஜிடபிள் புலாவ், வெஜ் ரோல், எக் ரோல், பாசிப்பருப்பு அல்வா ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன. உணவை சூடு செய்வதற்காக ஃபுட் கீட்டர்களும் வழங்கப்பட உள்ளன. குடிநீர் மற்றும் ஜூஸ்களை கொண்டு செல்வதற்கான பிரத்யேக உரையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon