--- --:--:-- --

பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி.. பரிதாபமாக பலியான சோகம்..!

7

காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அரசு மருத்துவ சுகாதார மையத்தில் கர்ப்பிணியும் அவருக்கு பிறந்த குழந்தையும் உயிரிழந்ததற்கு தவறான சிகிச்சையே காரணம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சத்யாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் இரட்டை குழந்தை பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த பொழுது சத்யா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சந்தேக மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் செங்கல்பட்டு ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உடற்கூறாய்வுக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

 

Right Menu Icon