--- --:--:-- --

தமிழகத்தில் இன்று மழை – எங்கெல்லாம் தெரியுமா?

02

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இன்று (ஜூலை 29) தொடங்கி 7 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அதேநேரம் நாளை (ஜூலை 30) நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் மற்றும் ஆகஸ்ட் 1ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதேநேரம் இன்று நாளையும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று நகரின் ஒரு சில பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்ப நிலை 102 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டக் கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon