திருப்பூரில் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் புழு
திருப்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் புழு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜெகன், தேவி தம்பதி திருப்பூர் அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்த ஜோசப் என்பவரின் கடையில் ஜெகன் பணியாற்றி வந்த நிலையில் மூன்று மாதங்கள் கர்ப்பமான தனது மனைவி தேவியை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது தேவிக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழு மற்றும் பஞ்சு போன்றவை இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குளுக்கோஸ் ஏற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது.






