--- --:--:-- --

10ஆம் தேதி நடைபெறும் திமுகவின் பொதுக்குழு கூட்டத்தின் சிறப்பம்சங்கள்

20

திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் பத்தாம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெறுகிறது. திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 3500க்கும் மேற்பட்டோர் இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ள உள்ளனர்.

 

அதில் சுமார் 200 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள திமுகவின் வரவு, செலவு கணக்குகளை பொருளாளர் துரைமுருகன் தாக்கல் செய்கிறார். உள்ளாட்சி தேர்தலை தனியாக சந்திப்பதா அல்லது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சந்திப்பதா என்பது பற்றி கருத்து கேட்கப்படுகிறது.

 

மேலும் சமஸ்கிருதம், ஹிந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி உறுப்பினராக இல்லாவிட்டாலும் திமுகவின் சின்னத்தில் பிற கட்சியினர் போட்டியிடும் வகையில் கட்சி விதியில் மாற்றம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கட்சியில் இளம்பெண்கள் அணியை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. திமுகவில் தலைவர் பொறுப்பில் கருணாநிதி நீடித்ததைப் போல உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்து வரும் பேராசிரியர் அன்பழகனும் பொதுச் செயலாளர் பொறுப்பில் நீடிப்பார் என தெரிகிறது.

 

ஆனால் பொது செயலாளருகான அதிகாரங்களை தலைவர் பொறுப்பில் உள்ளவர் வைத்துக்கொள்ளும் வகையில் சில மாற்றங்களை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon