ஆம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய பிரத்யே டிராக் செயலி
ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைப்பவர்கள் அது எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள பிரத்தியேக ட்ராக் செயலி இரண்டு மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
108 ஆம்புலன்ஸை அழைத்தால் வர ஒரு மணி நேரம் ஆகிறது என்ற திமுக உறுப்பினர் சண்முக அய்யாவின் குற்றச்சாட்டை மறுத்த அவர் தமிழகத்தில் சர்வதேச நாடுகளை விட ஆம்புலன்ஸ் விரைவாக வருவதாக தெரிவித்தார். மாநகராட்சிகளில் 8.2 நிமிடங்களிலும், கிராமங்களில் 13.5 நிமிடங்களிலும், மலைப்பகுதிகளில் 16 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வருவதாக அவர் கூறினார்.
200 புதிய ஆம்புலன்ஸ் தேவைகளுக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சேவை 108 இல் இல்லாமல் வேறொரு தொடர்பு எண்ணுடன் செயல்படும் என்று கூறினார்.





