--- --:--:-- --

சுஷாந்த் இறந்த அன்று அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஓடும் காட்சி..! திடீர் திருப்பம்..!

5

டிகர் சுஷாந்த் இறந்த அன்று அவரது வீட்டில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நுழைவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

ஜூன் 14 ஆம் தேதி போலீசாரும், ஆம்புலன்ஸ் ஊழியர்களும் சுஷாந்தின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பெண் ஒருவர் சுஷாந்தின் வீட்டில் நுழைந்து வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

பின்னர் அந்த பெண் வெளியில் இருக்கும் நபரிடம் ஏதோ ஒரு பொருளை கொடுப்பதும், அவர் அதனை கருப்பு நிற பையில் போடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

 

இந்த இருவரிடமும் மும்பை போலீசார் விசாரிக்க வில்லை என கூறப்படும் நிலையில், இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon