--- --:--:-- --

ஜன.13 முதல் பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறையா…?

5

வரும் 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை கொடுப்பது குறித்து முதல்வருடன் கலந்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

 

தமிழகத்தில் வழக்கம்போல பள்ளிகள் சனிக்கிழமை செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இரண்டு நாட்கள் நீடித்ததால் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதனால் பாடத்திட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முடிப்பதற்காகவும், மாணவர்களின் நலன் கருதியும் சனிக்கிழமையும் தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon