பொள்ளாச்சியில் அரங்கேறிய மற்றொரு அதிர்ச்சி சம்பவம்! 9 வயது சிறுமியை சீரழித்த வளர்ப்பு தந்தை
பொள்ளாச்சி அருகே, ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுப்பாளையம் பகுதியில் இயங்கும் அரசு பள்ளியில், 9 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி, வகுப்பறையில் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
இது குறித்து பள்ளி ஆசிரியை அந்த மாணவியிடம் விசாரித்துள்ளார். அப்போது, வளர்ப்பு தந்தையே அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக கோவை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் அளித்தனர். மேலும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமியின் வளர்ப்பு தந்தை பரமன் என்கிற பரமசிவம் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தொப்பம்பட்டி பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த பரமசிவத்தை கைது செய்த விசாரித்தனர். பின்னர்,கோ வை ஜே.எம்.5 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஏற்கெனவே, பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை ஒரு கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. தற்போது வளர்ப்பு தந்தையே மகளை வன்கொடுமை செய்த சம்பவம், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




