கொள்கை அடிப்படையில்தான் அரசியல் வேண்டும்..!
சென்னை எழும்பூரில் பா.ஜ.க. நிர்வாகி சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் 16-ந்தேதி த.வெ.க. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்தபோது சரத்குமார் கூறியதாவது; எல்லோரும் போராட்டம் நடத்துவதால் நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்பதுபோல் செயல்படுகிறார்கள். அவர்கள் கொள்கை அடிப்படையில் அரசியல் செய்யவில்லை.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.) குறித்து முழுமையாக புரிந்து கொண்டு பேச வேண்டும் என்றார்.





