முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி கூறிய காவல்துறையினர்..!
காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கி அரசாணை வெளியிட்டது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையிலான அனைத்து நிலை காவலர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க கடந்த 3ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.






