--- --:--:-- --

72 குண்டுகள் முழங்க விவேக் உடலுக்கு காவல்துறை இறுதி மரியாதை..!

4

 மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் இருந்து மின்மயானம் உள்ள உள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. 24 காவலர்கள் 3 முறை வான் நோக்கி சுட்டு விவேக்கிற்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர்.

 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீர் நெஞ்சுவலி வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரது மனைவியும் மகளும் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மனுவில் நடிகர் காலமானார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961ஆம் ஆண்டு பிறந்த நடிகர் விவேக் 1986 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை தலைமைச்செயலக ஊழியராக பணி புரிந்தார்.

 

பின்னர் திரை மீது  கொண்ட ஆர்வத்தால் இயக்குனர் கே பாலச்சந்தரின் இயக்கிய படத்தில் அறிமுகமானார். அதன்பின் நகைச்சுவை காட்சிகளை வெளிப்படுத்தி மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவரின் இறப்பு தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon