பட்ட பகலில் மர்மநபர்களால் வெட்டி கொலை…போலீசார் விசாரணை..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விதவைப் பெண் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தொங்குட்டிபாளையத்தை சேர்ந்த வேலுமணி பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இவர் தனது மகன் நவீன்குமாரை பள்ளியில் விட்டு விட்டு வேலைக்கு நடந்து சென்றபோது மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் வேலுமணிக்கு கழுத்து மற்றும் மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





