புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிய காவல்துறை!
ஊரடங்கு காரணமாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற முடியாமல் தவித்த மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த சிறுமிக்கு காவலர்கள் உதவினர்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வரும் சரோஜினி என்பவரின் மகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக மாதாந்திர மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அரசு மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் குமாரிடம் சரோஜினி தொலைபேசி வாயிலாக முறையிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் அகதிகள் முகாமிற்கு சென்று காவலர்கள் காவல்துறை வாகனத்திலேயே அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மருத்துவ சிகிச்சை முடிந்து அதே வாகனத்தில் மீண்டும் வீட்டில் கொண்டு விட்டனர். இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே நிகழ்ச்சி ஏற்படுத்தியது.
தமிழகத்தில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் தெரு நாய்கள் மற்றும் காக்கைகளுக்கு பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை சிலர் வழங்கி வருகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் தெரு நாய்கள் பூனைகள் உள்ளிட்ட விலங்குகள் தெருவோரக் கடைகள் மற்றும் சாலையோர மனிதர்களை அண்டி வாழும்.
ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தெருநாய்கள் மற்றும் காக்கைகள் உணவின்றி தவிக்கின்றன. இந்நிலையில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் நபரொருவர் தான் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து பசியோடு கிடந்தது தெரு நாய்களுக்கும் காக்கைகளும் வழங்கினார்.







