--- --:--:-- --

மாணவி கழுத்தில் சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரத்தில் காவல்துறை அதிருப்தி..!

4

டலூரில் மாணவி கழுத்தில் சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரத்தில் காவல்துறை அவசர கதியில் செயல்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற அதிருப்தி தெரிவித்துள்ளது. சிதம்பரத்தில் 11 வயது மாணவிக்கு மாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற காட்சி சமூக வலைதளத்தில் பரவியது.

 

இது தொடர்பாக அந்த மாணவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட குழந்தைகள் நல குழு மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது. இந்நிலையில் மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

 

இதை விசாரித்த நீதிமன்ற மாணவியை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. முழுமையாக விசாரணை நடத்தாமல் அவசர கதியில் மாணவியை அரசு காப்பகத்தில் தங்க வைத்த குழந்தைகள் நலக்குழு மற்றும் மாணவியின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செயல் குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon