தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்க கடலில் வரும் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.





