--- --:--:-- --

பிரதமர் மோடி தாய்க்கு எழுதிய கடித தொகுப்புகள் புத்தகமாக வெளியாக உள்ளது

Caption: Narendra Modi’s ‘Letters to Mother’ to release in June.

Caption: Narendra Modi’s ‘Letters to Mother’ to release in June.

பிரதமர் மோடி தனது தாயாருக்கு எழுதிய கடிதத் தொகுப்பு அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக ஹார்பர் காலின்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

 

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் ஹீரா பெண்ணுக்கு பல்வேறு தலைப்புகளில் கடிதம் எழுதியுள்ளார் என்றும் அந்தக் கடிதங்கள் அனைத்தும் 1986 ஆம் ஆண்டிற்கு முந்தையது என்றும் தெரிவித்திருக்கிறது.

 

பிரதமர் மோடி ஒரு இளைஞனாக தமது தாய்க்கு கடிதம் எழுதும் பழக்கத்தை கொண்டு இருந்ததாகவும் அதில் மகிழ்ச்சியான தருணங்கள், நீடித்த நினைவுகள், துக்கங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

குஜராத்தி மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதங்களை திரைப்பட விமர்சகர் சோமையா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்றும் இந்த கடிதத் தொகுப்பு அடுத்த மாதம் வெளியாகிறது என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon