--- --:--:-- --

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!

1

கொரொனா பரவல் தடுப்பு மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.

 

நாடு முழுவதும் 12 மாநிலங்களில் கொரொனா தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை அலட்சியப்படுத்தி வருவதால் மூன்றாம் அலை தாக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

 

நிலைமையை எதிர்கொள்வது குறித்து வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய் அன்று காவிரி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

 

இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா ,மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார். காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

Leave a Reply

Right Menu Icon