--- --:--:-- --

உடற்பயிற்சியை கட்டாயமாக்க பிரதமர் மோடி உரை!

download (3)

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா இயக்கத்தை டெல்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.

 

இந்திராகாந்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியின் உடற்பயிற்சி செய்வோம் என்று உறுதிமொழியை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அன்றாட வாழ்வில் உடற்பயிற்சியில் அங்கமாகி கொள்ள வேண்டும், என்ற நோக்கில் இந்திய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

உடற்பயிற்சி விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஆனது என்பதால் அதை நாள்தோறும் தவறாமல் செய்யலாம் என்று மோடிக்கு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த இயக்கத்தை நாடு முழுவதும் பரப்பும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் 28 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த குழுவில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷில்பா செட்டி கவுதம் கம்பீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இளைஞர் நலத்துறை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பிரதிநிதிகளும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். நிகழ்ச்சியின் இடையே இந்தியா இயக்கத்தின் பரப்புரை வீடியோ வெளியிடப்பட்டது.

 

ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் பங்கேற்றார்கள். உடற்பயிற்சி குறித்து விளக்கம் அளிக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Leave a Reply

Right Menu Icon