உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதில் பிளஸ்டூ மாணவனின் கை எலும்பு முறிந்தது..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதில் பிளஸ்டூ மாணவனின் கை எலும்பு முறிந்தது புகார் எழுந்துள்ளது. விருதாச்சலம் லூக்காஸ் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ரோஷன். அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறான்.
இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ரோஷன் கூட்டத்தில் வரிசையில் நின்றார். அப்பொழுது அவர் சரியாக நடக்கவில்லை என கூறி உடற்கல்வி ஆசிரியர் ராஜராஜசோழன் என்பவர் மாணவரை பலமாக தடியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் மாணவனின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கையில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் உடற்கல்வி ஆசிரியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.





