--- --:--:-- --

+1 தேர்வு முடிவுகள் நாளைமறுநாள் வெளியீடு…! +2 மறுதேர்வு முடிவும் அன்றே வெளியாகும் என அறிவிப்பு!!

download (1)

+1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.619 மாணவர்கள் எழுதிய +2 மறுதேர்வு முடிவும் அன்றே வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த +1 பொதுத் தேர்வை 8.32 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக +1 கடைசித் தேர்வு மட்டும் அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில் கடைசியில் ரத்தானது. மேலும் கொரோனா காரணமாகவும் தேர்வுத் தாள் திருத்துவது மற்றும் முடிவு வெளியிடுவதும் தள்ளிப்போனது. இந்நிலையில் நாளை மறுதினம் காலை 9 மணிக்கு +1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

 

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த இரு வாரங்களுக்கு முன் வெளியாகியிருந்தது. இதில் ஊரடங்கு காரணமாக கடைசித் தேர்வை 35 ஆயிரம் மாணவர்கள் எழுத முடியாமல் போனது. எனவே அவர்களுக்கு மறுதேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால் மொத்தமே 619 மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுதிய நிலையில், உடனடியாக தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்றே நடைபெற்றது. இந்த தேர்வு முடிவும் நாளை வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

 

Subscription

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon