மே 3ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது..!
மே 3ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத் தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
கொரொனா அச்சம் காரணமாக தொடர்ச்சியாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரையில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்திருந்தார். 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






