கொரோனாவை விரட்ட பிளாஸ்மா சிகிச்சை…தமிழ்நாடும் அனுமதி கோரியுள்ளதா?
தமிழ்நாட்டில் கொரொனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் தங்கள் பிளாஸ்மாவை தானமாக வழங்குவதன் மூலம் நூற்றுக்கணக்கான பிற நோயாளிகள் உடல் நலம் பெற உதவ முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் இரத்தத்தில் அந்த வைரஸை எதிர்க்கும் ஆற்றல் இருக்கும்.
அவ்வாறு குணமடைந்து பயன்படுத்தி பிறகு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரியுள்ளது. பிளாஸ்மா தானம் கொடுப்பவர் மற்றும் பயனாளிக்கு ஒரே வகையான ரத்தம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த ரத்த வகையை சேர்ந்தவரும் பிளாஸ்மா கொடுக்க முடியும். கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட சிகிச்சை முறையான பிளாஸ்மா தெரபி என்றால் என்ன? நமது உடலில் வைரசோ அல்லது பாக்டீரியாவோ புகுந்துவிட்டால் ரத்த பிளாஸ்மாவில் அதிகளவு பிறபொருள் எதிரிகள் உருவாகி நோய் எதிர்ப்பு மண்டலத்தை எச்சரிக்கும். அப்போது உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்கள் அந்த வைரஸ் அல்லது பாக்டீரியாவை அழிக்கும். இப்படி தான் நோய் தொற்றிலிருந்து நோயெதிர்ப்பு மண்டலம் உடலைக் காக்கிறது.
மஞ்சள்காமாலை, தட்டம்மை, மலேரியா, டைபாய்டு என்று ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியான பிறபொருள் எதிரி நமது உடலில் உருவாகிறது. அப்படி உருவாகும் பிறபொருள் எதிரி நம் ரத்தத்தில் வாழ்நாள் முழுவதும் கலந்திருக்கும். மீண்டும் அதே நோய் நமது உடலைத் தாக்கினால் அந்த பிறபொருள் எதிரி அந்த நோயை விரட்டி அடிக்கும். தற்போது பரவும் வைரஸ் நமது உடலுக்குள் செல்வது புதிது என்பதால் அதனை அழிக்கும் பிறபொருள் எதிரியை உருவாக்க தமது நோய் எதிர்ப்பு மண்டலம் கடினப்படலாம்.
கொரொனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு அவர்களது ரத்தத்தில் அந்த வைரஸை கட்டுப்படுத்தும் பிறபொருளெதிரிகள் அதிகமிருக்கும். எனவே அவர்களின் ரத்த பிளாஸ்மாவில் இருந்து பிறபொருளெதிரியை பிரித்தெடுத்து மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு செலுத்துவதே பிளாஸ்மா தெரபி சிகிச்சை எனப்படுகிறது. இந்த சிகிச்சை முறை புதிது அல்ல.
1890 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்காக 1901ஆம் ஆண்டு ஜெர்மனி ஆராய்ச்சியாளர் மருத்துவத்திற்கான முதல் நோபல் பரிசை பெற்றார். அதன்பிறகு 1918 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளு போன்ற தொற்று நோய் பரவியபோது பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. சார்ஸ், எபோலா போன்ற நோய்களின் போதும் சிகிச்சை மூலம் பலர் காப்பாற்றப்பட்டனர். எனவே கொரொனாவிலிருந்து காக்கவும் இதே சிகிச்சை முறையை சீனா கையிலெடுத்தது.
வேண்டிலேட்டரில் 3 நாட்களில் இருந்த நோயாளிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சீனாவைத் தொடர்ந்து இந்த சிகிச்சை முறையை தென் கொரியா, துருக்கி, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கையில் எடுத்துள்ளன. இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
ஏற்கனவே கேரளாவில் இந்த சிகிச்சையை சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி பெற்று நிலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களும் பிளாஸ்மா சோதனை மேற்கொள்ள அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.







