--- --:--:-- --

பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்..!

3

ளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை கருதி ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பெண்களுக்கு ஆட்டோ வாங்க தலா 1 லட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்தின் கீழ் 250 ஆட்டோக்கள் சென்னையில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலர் ஓட்டி வருவதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் சமுகலநலத்துறை கள ஆய்வுக் குழு மூலம் ஆய்வு நடத்தியதில் சில ஆண்கள் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஓட்டியது கண்டறியப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சமூகநலத்துறையால் எச்சரிக்கப்பட்டது.

சமூக நலத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரும் ஆண்கள் சிலர் இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கி வருவதாக புகார் பெறப்பட்டுள்ளதாக்கக் கூறியுள்ள ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Right Menu Icon