இரண்டு தலைகள், மூன்று கண்களுடன் பிறந்த பன்றி குட்டி..!
பிலிப்பைன்ஸில் வெள்ளை பன்றி ஒன்றுக்கு இரண்டு தலைகள், மூன்று கண்களுடன் குட்டி பிறந்துள்ளது. பிகுவால் மாகாணத்தை சேர்ந்த பெர்னாண்டோட் பெரோமியோ என்ற பெண் தனது தோட்டத்தில் வெள்ளை பன்றி ஒன்றை வளர்த்துள்ளார்.
அந்த பன்றிக்கு அண்மையில் 4 குட்டிகள் பிறந்த நிலையில் அதில் ஒரு ஆண் குட்டிக்கு மட்டும் இரண்டு தலைகள், மூன்று கண்கள் இருந்தன. அரிதாக ஆமைகள், பாம்புகள் ஆகியவை சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தலையோடு பிறப்பது வழக்கம்.
அதைவிட அரிதாக இரண்டு தலைகளுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ளதால் அது குறித்து ஆராய்ச்சி செய்ய கால்நடை துறையினர் முடிவு செய்துள்ளனர்.






