--- --:--:-- --

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏன்..?

1.1

ந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவது தாமதமாக வருவது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

 

சீனா, அமெரிக்கா, பிரிட்டன் என பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி விட்டதாகவும் இந்தியாவில் எப்போது அந்த பணி தொடங்கும் என்றும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

வெளிநாடுகளில் இதுவரை 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டதாகவும் ராகுல்காந்தி தன் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பைசர்,பாரத் பயோடெக் ஆகிய நிறுவனம் தாம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரி மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனகரத்திற்கு ஏற்கனவே விண்ணப்பம் செய்திருந்த போதும் அதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.

Leave a Reply

Right Menu Icon