--- --:--:-- --

தடுப்பூசி போட்ட சில மணி நேரத்தில் உயிரிழந்த குழந்தையின் உடல் உடற்கூராய்வு..!

5

கோவையில் தடுப்பூசி போட்ட சில மணி நேரத்தில் மூன்று மாத குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் குழந்தையின் உடல் கூறு ஆய்வு செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் – விஜயலட்சுமி என்பவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. பிரசாத் கோவையில் உள்ள தங்கி கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

 

இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு நேற்றையதினம் அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போட்ட நிலையில் அந்த குழந்தை மயங்கி விழுந்தது. இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துவிட்டது.

 

தடுப்பூசி போட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது குழந்தையின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon