கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மாரடைப்பால் மைதானத்திலே உயிரிழப்பு..!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஆடுகளத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மாரடைப்பால் தரையில் சாய்ந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
புனே மாவட்டம் யாதவ் வாடியில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் மறுமுனையில் நின்று கொண்டிருந்தவர் திடீரென தரையில் சாய்ந்து விழுந்துள்ளார்.
உடனடியாக மற்ற வீரர்களும் விரைந்து அவரை தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உடற்கூறாய்வில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.






