ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியீடு..!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் கடந்த 4ம் தேதி அவரை சடலமாக மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அதன் மூலம் ஜெயக்குமார் கை, கால்கள் மற்றும் கழுத்தில் இரும்பு கம்பியால் சுத்தப்பட்டு இருப்பதும் வயிற்றில் கடப்பாக்கல் வைத்து கட்டப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்களின் அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் ஆகியோருடன் போலீசார் விசாரணை நடத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





