--- --:--:-- --

சேலம் அரசு மருத்துவமனையில் இளம் மருத்துவர் உயிரிழப்பு..!

4

சேலம் அருகே மருத்துவமனை கழிவறையில் இளம் மருத்துவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருணகிரி. 33 வயதான இவர், அரசு மருத்துவமனையில் இருதய மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் பணியில் ஈடுபட்டிருந்த அருணகிரி வெகுநேரமாகிய மாறாததால் சந்தேகம் அடைந்து மருத்துவமனையில் தேடி உள்ளனர். அப்பொழுது அவர் மருத்துவமனை கழிவறையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாரடைப்பு ஏற்பட்டு அருணகிரி உயிரிழந்துள்ளதாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon