விஜய் பரப்புரையால் துணை முதலமைச்சர் உதயநிதி பரப்புரைக்கு அனுமதி மறுப்பு
கடலூர் மாவட்டத்தில் நாளை விஜய் பரப்புரை செய்ய உள்ளதால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின் படி முதலில் யார் விண்ணப்பிக்கிறார்களோ அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
அதன்படி விஜய் முதலில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தததால் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நாளை விஜய் பரப்புரைக்கு பிற்பகல் 2 மணி முதல் இரவு 1 மணி வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி திட்டக்குடி, நெய்வேலி, வடலூரில் நாளை பரப்புரை செய்ய அனுமதி கேட்டிருந்தார்.





