--- --:--:-- --

பெரியாயிபாளையம் குறுவள மைய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் : அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி 10 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை

1

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாரம் பெரியாயிபாளையம் குறுவள மைய அளவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த கலைத்திருவிழா போட்டிகள் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. போட்டியில் 14 பள்ளிகளை சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

பேச்சு, வர்ணம் தீட்டுதல் உள்பட 13 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 10 போட்டிகளில் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 

பேச்சு போட்டியில் 4-ம் வகுப்பு மாணவி விவிதா முதலிடம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 4-ம் வகுப்பு மாணவி பூவிதாஸ்ரீ முதலிடம், மெல்லிசை தனிப்பாடல் போட்டியில் 4-ம் வகுப்பு மாணவி ராமலட்சுமி முதலிடம், தேச பக்தி பாடல் போட்டியில் 5-ம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ முதலிடம், களிமண் பொம்மைகள் செய்யும் போட்டியில் 5-ம் வகுப்பு மாணவர் திவ்ய பிரகாஷ் முதலிடம், பரதநாட்டியத்தில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவிகள் பூவிதாஸ்ரீ, தெளகிதா, மோனிஸ்ரீ, கோவர்த்தினி, ஷஸ்வதி ஆகியோர் கொண்ட குழுவினர் முதலிடம் அதேபோல் நாட்டுப்புற நடனத்தில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவிகள் தேவிகா, பிரீத்தா, நூருல் ஹசீனா, தரணிஸ்ரீ, சாதனாஸ்ரீ, சிவப்பிரியா, மாணவர்கள் சச்சின், தரணீஷ், ஹரிவர்ஷன் ஆகியோர் கொண்ட குழுவினர் முதல் இடத்தை பெற்றனர்.

 

அதேபோல் வண்ணம் தீட்டுதல் போட்டியில் 1-ம் வகுப்பு மாணவி அபூர்வாஸ்ரீ இரண்டாமிடமும், மாறுவேட போட்டியில் 1-ம் வகுப்பு மாணவர் ரித்திக் ரோஷன் இரண்டாமிடமும், கதை கூறுதல் போட்டியில் 2-ம் வகுப்பு மாணவி சிவன்யா மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 

வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்

Right Menu Icon