மக்களின் கோரிக்கைகளை 100 நாட்களுக்குள் திமுக நிறைவேற்றும்..!
மக்களின் கோரிக்கைகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்ற திமுக ஆட்சியில் தனித்துறை உருவாக்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக சார்பில் பல்வேறு கட்டங்களாக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திருவண்ணாமலையில் மு க ஸ்டாலின் பரப்புரையை தொடங்கியுள்ளார்.
அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஒரு பெட்டியில் போட்டு சீல் வைத்துள்ளார். பேசிய ஸ்டாலின் மக்களின் கோரிக்கைகளுக்கு திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என கூறினார்.






