விமான போக்குவரத்துக்கான தடை 28ஆம் தேதி வரை நீட்டிப்பு..!
இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரொனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே 25ஆம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.
பின்னர் குறிப்பிட்ட சில நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட சிறப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையே மட்டும் விமான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை எதிர்வரும் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சரக்கு விமான போக்குவரத்து இந்த தடை கட்டுப்படுத்தாது என தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பயணிகள் விமான போக்குவரத்தும் இந்த தடையால் பாதிக்காது என விளக்கம் அளித்துள்ளது.
அது மட்டுமின்றி சர்வதேச அளவில் திட்டமிடப்பட்ட விமானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் தகுதி பெற்ற அதிகாரிகள் அனுமதியுடன் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







