கொரொனாவில் இருந்து குணமானவர்களுக்கு 8 மாதங்களுக்கு கொரொனா தொற்று வராது..!
கொரொனாவில் இருந்து குணமானவர்களை குறைந்தது எட்டு மாதங்களுக்கு இந்த வைரஸ் மீண்டும் தாக்காது என பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எதிர்ப்பு சக்தி அறிவியல் என்ற சர்வதேச மருத்துவ இதழில் கொரொனா வைரஸ் தொற்று குறித்த விரிவான ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மொனாஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில இடங்களில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. இதில் கொரொனா தொற்றியவர்களுடன் அந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறைந்தது எட்டு மாதங்களுக்கு அவர்கள் உடலில் இருக்கும் என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த 25 பேரை சோதனைக்கு உட்படுத்தி அவர்களின் ரத்த மாதிரி தொற்று ஏற்பட்ட நான்காவது நாளிலிருந்து 242வது நாள் வரை ஆய்வு செய்யப்பட்டது.
இதில் தொற்று ஏற்பட்ட இருபதாவது நாளில் இருந்தே எதிர்ப்பு சக்தி உருவாக தொடங்கி விடுவதாகவும், இது 240 நாட்கள் வரை நீடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது எதிர்ப்பு சக்தி நெடுநாளைக்கு நீடிக்கும் என்று ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






