ஆன்லைனில் வாக்களிப்பு – இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை
வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது குறித்து சட்ட அமைச்சகத்திடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய தேர்தலில் வாக்களிக்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக தேர்தல் ஆணையத்திடம் பல பரிந்துரைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது குறித்து சட்ட அமைச்சகத்துடன் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரி அனுப்பும் லிங்கை பயன்படுத்தி வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.






