--- --:--:-- --

ஒமைக்ரானை கண்டு மக்கள் அச்சம் அடைய வேண்டாம்..!

8

மைக்ரான் பரவலை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் குலேரியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விழிப்புணர்வு காணொளியில் பேசியவர் டெல்டா திரிபுவை போல ஓமிக்ரான் திரிபுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆக்சிஜன் தேவை படாது என கூறினார்.

 

தனிப்பட்ட நபர்களை நோய் எதிர்ப்பாற்றலை கருத்தில் கொண்டும், ஓமிக்ரானை எதிர் கொள்ள மறுத்தவர்கள் தயாராக வேண்டும் எனக் கூறியவர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாலும் இயற்கையாகவே இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் திறன் காரணமாகவும் ஓமிக்ரானை கண்டு அச்சமடையத் தேவையில்லை எனக் கூறினார்.

 

அதே நேரம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

Right Menu Icon