கோவை ரயில் நிலையத்தில் கூட்டம் கூட்டமாக கூடிய வட மாநிலத்தவர்கள்..!
தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்ல கோவை ரயில் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் 25ஆம் தேதி நடக்க உள்ளது.
இந்த நிலையில் கோவையில் உள்ள தொழிற்சாலைகள் கட்டுமான நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊரு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்.
சுமார் 50,000 வட மாநிலத்தவர்கள் சொந்த ஊர் சென்றுள்ளதால் தொழில் நிறுவனங்கள் உணவகங்கள் மற்றும் கட்டுமான பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.





