தேர்தலுக்காக போடப்பட்ட தார் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது..!
கன்னிவாடி அருகே தேர்தலுக்கு முன்பு அவசர கதியில் போடப்பட்ட தார் சாலை மழைக்கு அடித்து செல்லப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள பகுதியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு விளையும் பொருட்கள் தினம்தோறும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடந்த தேர்தலின் பொழுது ஊராட்சி நிர்வாகத்தால் அவசர கதியில் தார் சாலை போடப்பட்டது.
தரமாக தார் சாலை அமைப்பது தான் அந்த பகுதி மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தின. இந்த நிலையில் அவசர கதியில் போடப்பட்ட தார் சாலை மழைக்கு அடித்து செல்லப்பட்டதால் அந்த பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.





